News May 16, 2024

புதுக்கோட்டையில் மழை பெய்யும்

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 9, 2026

புதுக்கோட்டை: விடுமுறை கிடையாது!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது. 15 சென்டர்களில் மாணவர்கள் 8,595 பேரும் மாணவிகள் 10,305 பேரும் மொத்தம் 18,900 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் விடுமுறை கிடையாது. என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 9, 2026

புதுக்கோட்டை: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

திருமயம் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் நேற்று மேலூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திமுக, தவெக, தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவருமான பிகே.வைரமுத்து முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

News March 9, 2026

புதுக்கோட்டை: முன்னாள் MLA காலமானார்

image

புதுக்கோட்டை முன்னாள் காங்கிரஸ் MLA SC.சாமிநாதன் நேற்று மாலை இயற்கை எய்தினார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக தொலை தொடர்பு துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பதவிகளை வகித்து, பல்வேறு நபர்களுக்கு எஸ்டிடி பூத் அமைப்பதற்கு உதவி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை உயிரிழந்தவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!