News May 16, 2024

நன்னிலத்தில் ஆன்லைன் மோசடி!பணத்தை மீட்ட சைபர் போலீஸ்

image

நன்னிலம் தாலுகா பணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கோவிந்தசாமி என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பி, அவரிடமிருந்து OTP பெற்று வங்கி கணக்கிலிருந்து ரூ.18,561ஐ திருடியுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையில் கொடுத்த புகாரின்பேரில் ஜார்கண்ட் மாநில வங்கியிலிருந்து பணத்தை திரும்ப பெற்று போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Similar News

News July 8, 2025

10th போதும் இந்தியன் ரயில்வேயில் வேலை!

image

திருவாரூர் மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

திருவாரூர்: திடீர் தீ விபத்து-4 கூரை வீடுகள் சேதம்

image

திருவாரூர், பள்ளங்கோவில் புலியடி திடல் பகுதியில் ராஜேந்திரன் (65), செல்வராஜ் (70), தினேஷ் (35), சந்திரகாசன் (60) ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென இவர்கள் வீட்டில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 4 வீடுகளும் தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தன.

News July 8, 2025

திருவாரூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!