News May 16, 2024
வாலிபர்கள் மீது மரக்கிளை விழுந்து விபத்து

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லிங்கநாயக்கனல்லி அடுத்த தாஸ் நகர் பகுதியில் ஊர் பகுதியில் அமைந்துள்ள அரச மரத்தடியில் வாலிபர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து வாலிபர்கள் மீது விழுந்தது. அதில் ஸ்ரீதர்(21) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 17, 2026
தருமபுரியில் 250 கோழிகள் இலவசம்!

தருமபுரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
தருமபுரியில் மர்மமான முறையில் இறந்த சிறுத்தை!

ஒகேனக்கல், தாசம்பட்டி வனப்பகுதியில் நேற்று (ஜன.16) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 வயதுக்குட்பட்ட ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மற்றும் அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தையின் உடல் வனப்பகுதியிலேயே எரிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
தருமபுரி: உழவர் சந்தையின் விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.17) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.26, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.30, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.20, கொத்தவரை: ரூ.45, பச்சைமிளகாய்: ரூ.36, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.


