News May 16, 2024
ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2009இல் அமைச்சராக இருந்த போது வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
Ex-Agniveers-க்கு புதிய அப்டேட்!

4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களே Agniveers. 4 ஆண்டுகள் முடிந்த பின், 25% பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மற்றவர்கள் விடுவிக்கப்படுவர். இந்த Ex-Agniveers-க்கு, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் அல்லது பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களில், வேலை கிடைப்பதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
News October 29, 2025
தமிழக அரசில் 1,429 காலியிடங்கள்.. ₹71,000 சம்பளம்!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 1,429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: 10-ம் வகுப்பில் தமிழும், 12-ம் வகுப்பில் Science குரூப்பும் படித்திருக்க வேண்டும் ➤Health Inspector/ Sanitary Inspector சர்டிபிகேட் இருக்கணும். சம்பளம்: ₹19,500- ₹71,900 வரை. நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News October 29, 2025
BREAKING: விஜய் கட்சியை முடக்க முயற்சி

கரூருக்கு விஜய் தாமதமாக செல்ல காவல்துறையே காரணம் என தவெகவின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். போக்குவரத்தை போலீசார் சரியாக சீர் செய்து கொடுத்திருந்தால், விஜய் சரியான நேரத்தில் கரூர் சென்றிருப்பார் எனவும் கூறியுள்ளார். அதேபோல், தவெகவை முடக்க முயற்சி நடப்பதாகவும், எந்த வித நெருக்கடியையும் எதிர்கொள்ள தவெக தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


