News May 16, 2024
விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.
Similar News
News January 15, 2026
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.14) தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News January 15, 2026
தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு!

2026 தேர்தலையொட்டி தமிழகத்தில், EVM இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகளும், பெல் நிறுவன பொறியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். மொத்தம் 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.16 லட்சம் VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
News January 15, 2026
ஸ்மார்ட்போன் விலை அதிகரிக்கும்: Nothing CEO

இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விலைகள் 30% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று Nothing நிறுவனத்தின் CEO கார்ல் பேய் கணித்துள்ளார். memory, storage உள்ளிட்டவைகளின் தேவையை AI அதிகரித்துள்ளது. இதனால், memory, storage சிப்களின் விலை அதிகரிப்பால் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு செலவுகளும் அதிகமாகும். எனவே, போனின் அம்சங்களை குறைக்க வேண்டும் அல்லது விலையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


