News May 16, 2024
இன்றைய பொன்மொழிகள்

➤ அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும்
➤ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால்
நீங்கள் தான் உள்ளே செல்ல வேண்டும்
➤ நீங்கள் நாளையே இறந்துவிடுவீர்கள் என்பது போல வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என்பது போல கற்றுக்கொள்ளுங்கள்
➤ தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம்
➤ கற்றறிந்தவர்களாக இருப்பது மட்டுமல்ல, நல்லொழுக்கத்துடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது
Similar News
News October 28, 2025
2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: CM ஸ்டாலின்

2019-ல் இருந்து தாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளை பெற்று வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம் என கூறிய அவர், அன்றைக்கு தலைப்புச் செய்தி, திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது என்பதுதான் என்றும் குறிப்பிட்டார். இதை ஆணவத்தில் சொல்லவில்லை, மக்கள் மீதான நம்பிக்கையிலேயே சொல்வதாகவும் வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் CM கூறினார்.
News October 28, 2025
ஜெய் மகிழ்மதி.. விரைவில் பாகுபலி 3!

இந்திய சினிமாவை புரட்டிபோட்ட பாகுபலி படத்தின் பார்ட் 3-யை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆம், கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் & தயாரிப்பாளர்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தையில் ராஜமெளலி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் அனிமேஷன் படமாக எடுக்கப்படவுள்ளதாம். முன்னதாக, முதல் 2 பாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, ‘பாகுபலி The epic’ என்ற பெயரில், வரும் அக்டோபர் 31-ம் தேதி ரிலிஸாகவுள்ளது.
News October 28, 2025
தீவிர புயல்: 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

மொன்தா புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை சென்னை, செங்கை, திருவள்ளூர், கோவை, காஞ்சி, குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் பாதுகாப்புடன் இருங்கள். SHARE IT


