News May 16, 2024

கோலியை பாராட்டிய மிஸ்பா உல் ஹக்

image

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் அனைத்து வீரர்களும் அழுத்தத்தை உணர்வதாக தெரிவித்த அவர், அன்றைக்கு சிறப்பாக விளையாடும் அணியே வெற்றிபெறும் என்றார். ஒரு போட்டியை எப்படி சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதில் கோலி மிகவும் திறமையானவர் என்றும் அவர் பாராட்டினார்.

Similar News

News October 22, 2025

சினிமா மூலமே ஜனநாயகனாகி விட முடியாது: கி.வீரமணி

image

நடிகரின் அரிதாரம், பெரியார் படத்திற்கு மாலை ஆகியவை வெறும் காட்சிகள் தான், அரசியலில் சாதிக்கலாம் என்பது பகற்கனவே என்று விஜய்யை கி.வீரமணி மறைமுகமாக சாடியுள்ளார். சினிமா கவர்ச்சி, பல கோடி ரூபாய் பணம் ஆகியவற்றின் மூலம் உண்மையான ஜனநாயகனாக முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பிறரிடம் சரணடையாமல் புரிந்துகொண்டு, திருத்திக்கொண்டு அக்கட்சியினர் (தவெக) அரசியல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News October 22, 2025

Diwali Sweets சாப்டீங்களா? இப்போ இதையும் செஞ்சிடுங்க

image

லட்டு, மைசூர் பாக், ரவா லட்டு, அதிரசம், முறுக்கு என தீபாவளி பலகாரங்கள் எல்லாம் ஒருவழியாக சாப்பிட்டு முடித்திருப்பீர்கள். இதனால் அடுத்த சில நாள்களுக்கு அஜீரணம், உப்புசம் என வயிற்று பிரச்னைகள் ஏற்படலாம். இவை ஏற்படாமல் இருக்க, இளநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடியுங்கள். இதனால், அடுத்த நாளும் நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வராது. வயிற்று பிரச்னைகளும் சரியாகும். SHARE THIS.

News October 22, 2025

FLASH: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக ஏற்கெனவே <<18068743>>15 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!