News May 15, 2024

சபரிமலையில் தரிசனம் செய்த லோகேஷ் கனகராஜ்

image

வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக ஐயப்பன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று சபரிமலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவரை சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Similar News

News August 24, 2025

₹48,000 சம்பளம்.. 750 பணியிடங்கள் அறிவிப்பு!

image

Punjab & Sind வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 85 பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 30. தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல், உள்ளூர் மொழித்திறன். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it.

News August 24, 2025

சற்றுமுன்: விஜய்யுடன் கூட்டணி சேரும் பிரபல கட்சி?

image

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்பத்தை வைத்தே அரசியல் நடக்கிறது, ஆனால் விஜய்யை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள் என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் ‘ஆட்சியில் பங்கு’ என்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், ‘Uncle’ ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல என கூறியுள்ளார். தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைக் கொண்டிருக்கும் புதிய தமிழகம் கட்சி, தவெகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 24, 2025

மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் தீருநீற்றுபச்சிலை!

image

➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும்.
➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும்.
➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும்.
➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.

error: Content is protected !!