News May 15, 2024
ஊழல் குற்றச்சாட்டில் பாதுகாப்பு துறை இயக்குநர் கைது

ரஷ்ய பாதுகாப்பு துறையில் இயக்குநரக தலைவராக பணியாற்றிவரும் லெப். ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன் பேரில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதற்கிடையே அவரது வீடு & தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ₹8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News September 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 17, புரட்டாசி 1 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.30 PM – 5.00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சுன்யதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News September 17, 2025
நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?

காலை அலாரம் அடித்தவுடன் எழுந்திருப்பதில் தொடங்கி, இரவு தூங்கும் வரை டிஜிட்டல் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால், வெறும் 1 மணி நேரம் ஸ்கிரீன்களை பார்ப்பதாலேயே Myopia எனும் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் 21% உள்ளதாக JAMA Network Open ஆய்வில் தெரியவந்துள்ளது. 3.35 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?
News September 17, 2025
PM மோடிக்கு நண்பர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து

PM மோடிக்கு தொலைபேசி மூலம் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து PM தனது X பக்கத்தில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்பிற்கு நன்றி எனவும், உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். வரிவிதிப்பு விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.