News May 15, 2024

நான்காவது இடத்தில் கலக்கும் ரியான் பராக்

image

ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரியான் பராக் 4ஆவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடி வருகிறார். ஐபிஎல்லில் 4ஆவது வீரராக களமிறங்கி 500 ரன்களுக்கும் மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட்(579), ரோஹித் ஷர்மாவுக்கு (538) அடுத்தபடியாக 531 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கோலி, ருத்ராஜுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

Similar News

News October 26, 2025

புயல் அலர்ட்: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

image

மொன்தா புயல் முன்கூட்டியே இன்று மாலை உருவாகிறது. கனமழை பெய்யும் என்பதால் முதல் மாவட்டமாக புதுவையின் ஏனாமில் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை, விழுப்புரம், செங்கல்பட்டுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

News October 26, 2025

BREAKING: வேகமெடுக்கும் புயல்.. 11 மாவட்டங்களில் கனமழை!

image

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(அக்.27) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. <<18108169>>மொன்தா புயல் இன்று<<>> மாலையே உருவாகும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News October 26, 2025

பெண்கள் வளர்ச்சியில் தமிழகம் டாப்: தங்கம் தென்னரசு

image

நேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ₹11 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை தங்கம் தென்னரசு வழங்கினார். அதன்பின் பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களால் பெண்களின் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமூக முன்னேற்றத்திலும் மிக உயர்ந்த நிலையில், தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.

error: Content is protected !!