News May 15, 2024

ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: ஓம் பிர்லா

image

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தவறான ஆட்சியால் சோர்ந்துவிட்ட மக்கள், ஒடிஸாவில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். புவனேஷ்வரில் பேசிய அவர், “கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் நலனுக்காக செயல்படாத அரசை மக்கள் இம்முறை தூக்கியெறிய முடிவெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் நடக்கும் மக்களவை & சட்டப்பேரவை தேர்தலில் பிஜேடி கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்” என்றார்.

Similar News

News August 8, 2025

SK-வின் 2 புதிய படங்களுக்கு இசையமைக்கும் சாய்

image

‘பராசக்தி’, ‘மதராஸி’ படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த 2 படங்களுக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 படங்களையும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

News August 8, 2025

11-ம் வகுப்புக்கு நடப்பாண்டு பொதுத்தேர்வு இல்லை: TN அரசு

image

TN அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே தொடரும் என்றும் கூறியுள்ளது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், அதனை மாநில அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪தமிழகத்தின் <<17339521>>மாநிலக் <<>>கல்விக் கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார்.
✪எந்த <<17338572>>கட்சியையும் <<>>கூட்டணிக்கு அழைக்கவில்லை: EPS
✪ராகுலின் <<17338941>>புகாருக்கு <<>>EC விளக்கம் அளிக்க வேண்டும்: சசிதரூர்
✪உச்சம் தொடும் விலை.. தங்கம் சவரனுக்கு ₹75,760-க்கு விற்பனை
✪ரஜினி பட <<17338273>>நடிகையின் <<>>அண்ணன் அடித்துக் கொலை!

error: Content is protected !!