News May 15, 2024
எஸ்.எம் எஸ் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரக்கூடிய நிலையில், இன்று தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டு தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Similar News
News December 21, 2025
போடி அருகே சோகம் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

போடியை சேர்ந்தவர் பெரிய ஈஸ்வரன் (40). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (டிச.20) அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அங்கு செங்கலை தூக்கிக்கொண்டு இரண்டாவது மாடிக்கு சென்ற நிலையில் அங்கிருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெரிய ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு.
News December 21, 2025
தேனியில் ரூ.2 கோடிக்கு சாலை விரிவாக்க பணி

சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டி- சீப்பாலக்கோட்டை இடையே உள்ள குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. எனவே இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் சுமாா் 1.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தும் பணியில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
News December 21, 2025
தேனி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

தேனி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


