News March 19, 2026
தேர்தல் ஆணையத்தின் கையில் ‘ஜன நாயகன்’

‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையில், ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் வாரிய அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நடந்த இத்தணிக்கையை அடுத்து ரிலீஸ் அனுமதிக்காக ECI-க்கு அனுப்பப்பட்டுள்ளதாம். படத்தின் நாயகனான விஜய் அரசியல் கட்சி தலைவராக உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ’ஜன நாயகன்’ படத்தை ஆய்வுசெய்து ரீலிஸ் குறித்து ECI முடிவெடுக்குமாம்.
Similar News
News April 7, 2026
த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி.. REASON

சினிமாவை விட்டு த்ரிஷா விலகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், சினிமா மீதான காதலால் நடிப்பை கைவிடக் கூறியதால் நிச்சயதார்த்தத்துடன் திருமணத்தையே நிறுத்திய த்ரிஷாவா இந்த முடிவை எடுத்திருப்பது? என ரசிகர்கள் கேட்கின்றனர். மற்றொருபுறம், அவர் விரைவில் TVK-வில் இணையவுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். எது எப்படியோ, த்ரிஷா விளக்கமளித்தால் மட்டுமே இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.
News April 7, 2026
சசிகலாவுக்கு டிமிக்கி கொடுத்த வேட்பாளர்

சசிகலா கட்சியின் திருத்தணி வேட்பாளரான EX MLA நரசிம்மன் கடந்த சில நாள்களாக தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டார். இதனால், கடைசி நாளான நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேட்புமனு தாக்கல் செய்யாமல் டிமிக்கி கொடுத்துள்ளார். அதேபோல் EPS போட்டியிடும் எடப்பாடியில் ராமதாஸ் தரப்பு பின்வாங்கியதால், சசிகலா தரப்பு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 7, 2026
ருதுராஜை நீக்கும் திட்டத்தில் CSK?

CSK-வின் தொடர் தோல்விகளால், அணியில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர தோனி முடிவெடுத்துள்ளாராம். இதன்படி, DC-க்கு எதிரான 4-வது போட்டியிலும் ருதுராஜ் தன்னை நிரூபிக்கவில்லையென்றால், உர்வில் படேலை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இவ்வாறு நடந்தால் சஞ்சு கேப்டனாவார். அதேபோல், நூர் முகமதுவுக்கு பதில் அகில் ஹோசனை பிளேயிங் 11-ல் சேர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணி எப்படி உள்ளது?


