News May 15, 2024
குமரி: 19 ஆம் தேதி வரை மழை பெய்யும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படாதவாறு அணை கட்டு மற்றும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
துபாயில் கைது செய்யப்பட்ட குமரி மீனவரை மீட்க குடும்பத்தினர் மனு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனையை சேர்ந்த அருள்ரீகன்(43) துபாயில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில், ரஷ்ய நாட்டு நபர் ஒரு படகை கடத்திய வழக்கில், தொடர்பில்லாமலே அருள்ரீகன் உடந்தையாக செயல்பட்டார் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கணவரை மீட்டுத் தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் இன்று(ஆக.20) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
News August 20, 2025
குமரி: கூட்டு பட்டாவை, தனி பட்டாவாக மாற்றனுமா? SIMPLE..!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற<
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 20) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.61 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.30 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.68 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.79 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 648 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.