News May 15, 2024
புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்?

மகளிர் உரிமைத் தொகை ₹1000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு ₹1000 கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, விடுபட்ட தங்களுக்கு பணம் கிடைக்க செய்யுமாறு தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 427 ▶குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். ▶ பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
News August 14, 2025
அரசு ஊழியர்கள் திமுகவை எதிர்ப்பார்கள்: அன்புமணி

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எதிர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை இல்லை என்றார். இடஒதுக்கீடு வழங்கும்படி CM ஸ்டாலினை சந்தித்து தான் முறையிட்டதாகவும், ஆனால் அதனை தர அவருக்கு மனமில்லை என்றார்.
News August 14, 2025
அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம்

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியான சானியா சந்தோக் என்பவரை அவர் திருமணம் செய்யவுள்ளார். இருகுடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்தில் பங்கேற்றுள்ளனர். மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான ‘மிஸ்டர் பாவ்ஸ்’ என்ற சலூனை சானியா நடத்தி வருகிறார்.