News May 15, 2024

சுலோவேகியா நாட்டு பிரதமர் மீது துப்பாக்கி சூடு

image

சுலோவேகியா நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ (59) இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென பிகோவை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மர்மநபரை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 26, தை 12 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News January 26, 2026

ஹாட்ரிக் வெற்றியுடன் இந்தியா அபார சாதனை!

image

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3 ஹாட்ரிக் வெற்றியுடன் இந்திய அணி கைப்பற்றியது. குறிப்பாக 3-வது டி20-யில் வெறும் 10 ஓவர்களில் 154 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதன்மூலம் ICC முழு உறுப்பினர் அணிக்கு எதிராக அதிக பந்துகள்(60) மீதம் வைத்து 150+ இலக்கை துரத்திய அணி என்ற பெருமையை பெற்றது. மேலும் 2024 முதல் டி20-யில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை (11*) குவித்த அணியாகவும் இந்தியா மாறியுள்ளது.

News January 26, 2026

சங்ககால நட்புடன் மம்மூட்டியை வர்ணித்த கமல்

image

நண்பர் மம்மூட்டி இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார் எனக் கூறி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்து, ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம் என்றும், என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!