News May 15, 2024

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <>https://www.dge.tn.gov.in/<<>> இந்த இணையதளத்தில் அறியலாம்.

Similar News

News November 1, 2025

மனம் மயக்கும் ப்ரீத்தி

image

ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ப்ரீத்தி முகுந்தன், ‘ஆச கூட’ ஆல்பம் மூலம் பிரபலமானார். அழகு, நடனம், நடிப்பு என தனது பன்முக திறமையால், ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது நடனத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சேலையில் மயக்கும் ப்ரீத்தி முகுந்தன் போட்டோஸ் பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 1, 2025

விலை ஒரே அடியாக ₹4,000 குறைந்தது

image

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இந்த வாரம் சரிவை சந்தித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், வெள்ளி விலை கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ஒரு கிலோ வெள்ளி ₹1.70 லட்சத்திற்கு விற்பனையானது. தற்போது 1 கிராம் ₹166-க்கும் 1 கிலோ ₹1.66 லட்சத்திற்கும் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வெள்ளியின் விலை, ஒரு மாதத்தில் ₹40,000 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

தலையில் பேன் தொல்லையா? இதோ Solution!

image

தீராத பேன் பிரச்னைக்கு கிராம்பு தீர்வளிக்கும் என சருமநல டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கு பூண்டு சாறு & கிராம்பு பொடியை வேப்ப எண்ணெய்யில் கலந்து, முடியின் வேர்வரை படும்படி நன்றாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் வெந்நீரில் தலைமுடியை அலச வேண்டும். இதை வாரத்திற்கு இரு முறை என, ஒரு மாதம் செய்துவர பேன்கள் முற்றிலுமாக நீங்கிவிடும் என சொல்கின்றனர். SHARE THIS.

error: Content is protected !!