News May 15, 2024

தூத்துக்குடி : நாளை கனமழைக்கு வாய்ப்பு.

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 6, 2025

தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

image

சென்னை-தூத்துக்குடிக்கு இன்று காலை 10:10 மணிக்கு 65 பயணிகள் உட்பட 70 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், ஓடுபாதையில் செல்லும்போது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் உரிய நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர். கோளாறு சரிசெய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

குடமுழுக்கு 40 எல்இடி, 40,000 அடி பிரம்மாண்ட மேடை

image

திருச்செந்தூர் கும்பாபிஷேத்தை முன்னிட்டு 40 எல்இடி டிவி மற்றும் 40 ஆயிரம் சதுர அடி பிரம்மாண்ட மேடை கோவில் நிர்வாகத்தால் அமைக்கபட்டு வருகிறது. அந்த பிரம்மாண்ட மேடையில் பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. மேலும் பலர் இந்த கோவில் கும்பாபிஷேத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் 40 எல்.இ.டி டிவி கோவில் சார்பில் வைக்கபட்டுள்ளது .

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தூத்துக்குடி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!