News May 15, 2024

நெல்லை : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 6, 2025

பாளை: வாலிபரை தாக்கி நகைகள், செல்போன் பறிப்பு

image

கொங்கந்தானபாறையை சேர்ந்த சுபின் வண்ணார்பேட்டையில் இருந்து வடக்கு பைபாஸ் ரோடு வழியாக வெள்ளகோவில் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி ஏடிஎம் கார்டு, செல்போன், தங்க செயினை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த சுபின் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குது பாளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2025

நெல்லையில் உயரும் குடிநீர் கட்டணம்

image

நெல்லை மாநகரில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.100 இருந்த நிலையில் அதனை வீடுகளின் பரப்பளவு அடிப்படையில் ரூ.120 முதல் ரூ.300 வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்கான டெபாசிட் தொகை ரூ.5000-ல் இருந்து அதிகபட்சம் ரூ.40,000 வரை உயர இருக்கிறது. நவ.11 அன்று நடைபெறும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

News November 6, 2025

நெல்லை காவல் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் கார்த்தி மணி உத்தரவுபடி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை இரவு காவல் பணியில் செயல்படும் அதிகாரிகள் காவல் நிலைய பகுதி வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!