News May 15, 2024
குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட எண்ணும் FII! – 2/2

அதாவது, நிகர குறுகிய நிலை ஒப்பந்தங்கள் (ஷார்ட் பொசிஷன் ) 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2,13,224-ஐ எட்டியுள்ளது. பங்கு மதிப்பு குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில், ஒரு தரகரிடம் இருந்து கடன் வாங்கிய பங்குகளை மற்றொரு நபருக்கு விற்று, பின் அதே அளவு பங்குகளை மீண்டும் வாங்கி தரகரிடம் ஒப்படைப்பதே ஷார்ட் பொசிஷனாகும். இதே தந்திரத்தின் மூலம் FIIகள் லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
Similar News
News October 29, 2025
டிரம்புக்கு வடகொரியா மிரட்டலா?

இன்று டிரம்ப் தென்கொரியாவுக்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். இந்நிலையில், அவர் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வடகொரியா, கடலில் இருந்து நிலத்திற்கு பாயும் ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த சோதனை டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு விடுத்த மறைமுக மறுப்பாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
News October 29, 2025
அதுக்கு ஆபாச படங்களை எடுக்கலாம்: பேரரசு

‘டியூட்’ படத்தை இயக்குநர் பேரரசு மறைமுகமாக விமர்சித்துள்ளார். எந்த படங்களை எடுத்தாலும், அதன் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும் எனவும், கலாச்சார சீரழிவு படங்களை எடுப்பதை விட ஆபாச படங்களை எடுப்பது எவ்வளவோ மேல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கலாச்சார சீரழிவு படங்களை எடுத்து மக்களை கெடுக்க வேண்டாம் எனவும், பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்கிறது என்றும் பொங்கியுள்ளார்.
News October 29, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு.. அதிமுக அதிர்ச்சி

கரூர் துயர சம்பவத்திற்கு பின் அதிமுக – தவெக கூட்டணி அமையக்கூடும் என யூகங்கள் எழுந்தன. அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்தது அதற்கு மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில், 2026 தேர்தலில் தனித்து களம் காணவே விஜய் முடிவு செய்துள்ளார். தவெக கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என <<18140418>>CTR நிர்மல் குமார்<<>> விளக்கம் அளித்துள்ளார். திமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என விஜய் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


