News May 15, 2024
இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இந்தியா ஈடுபட வேண்டும்!

லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக இரு மடங்கு அதிக ஆற்றலைக் கொண்ட நீர் பேட்டரியை
சீன விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். வாட்டர் பேட்டரிகள், அன்ஹைட்ரஸ் லித்தியம் பேட்டரிகளை விட பாதுகாப்பானவை என்றும் இவற்றை மின்சார வாகனங்களில் பயன்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,470-க்கும், சவரன் ₹75,760-க்கும் விற்பனையாகிறது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
News August 8, 2025
EPS வயிற்றெரிச்சலில் புலம்பிவருகிறார்: TRB ராஜா

பாஜகவை போலவே தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வேலையை அதன் கூட்டாளியான அதிமுகவும் செய்து வருவதாக அமைச்சர் TRB ராஜா விமர்சித்துள்ளார். தமிழ்நாடு வளர்ச்சியை பார்த்து மக்கள் பெருமைப்படும் வேளையில், EPS வயிற்றெரிச்சலில் புலம்பி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து EPS விமர்சித்த நிலையில் அதற்கு TRB ராஜா பதிலடி கொடுக்கும் வகையில் இதனை தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
இறங்குமுகத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள்!

USA வரி விதிப்பு சர்ச்சையால் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை கண்டுள்ளன. இன்றும் சரிவுடன் சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து 80,478 புள்ளிகளிலும், நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 24,544 புள்ளிகளிலும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. HDFC Bank, Bharti Airtel, Cipla, Hindalco உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.