News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
2,500 தெருநாய்களைக் கொன்று உரமாக்கினோம்: கர்நாடக MLC

தான் சிக்கமகளூர் சேர்மனாக இருந்தபோது 2,500 தெருநாய்களைக் கொன்று, அதனை மரங்களுக்கு அடியில் புதைத்து இயற்கை உரமாக்கியதாக கர்நாடக MLC போஜேகவுடா சட்டசபையில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யாராவது தெருநாய்கள் அகற்றப்படுவதை எதிர்த்தால் அவர்களது வீடுகளுக்குள் 10 தெருநாய்களை விட்டு விடுவேன் என்றும் அவர் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
News August 13, 2025
நீங்க தான் தலைவரே முதல் வாத்தியார்.. ஹிருத்திக் ரோஷன்

‘என் முதல் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என ரஜினிகாந்தைக் குறிப்பிட்டு, அவரது 50 ஆண்டுகால திரைப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன். ‘கூலி’ படத்துடன் ஹிருத்திக், ஜூனியர் NTR நடித்துள்ள ‘WAR 2′ படமும் ரிலீஸாகிறது. இந்நிலையில், ஒரு நடிகராக எனது முதல் படியை உங்கள் (ரஜினி) அருகில் இருந்து தொடங்கியதாகக் கூறி அவர் நெகிழ்ந்துள்ளார். நீங்க படம் பார்க்க ரெடியா?
News August 13, 2025
ஒரே வீட்டில் 269 வாக்காளர்கள்

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முசாஃபர்பூரில் உள்ள ஒரு வீட்டில் 269 வாக்காளர்கள் இருப்பதாக ECI தரவு வெளியிட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரேயொரு வாக்கு மட்டுமே உள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இது BJP – ECI வாக்கு முறைகேட்டிற்கான சான்று என காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.