News May 15, 2024
பாண்டியாவுக்கு ஆதரவாக பேசிய கம்பீர்

பிளே ஆஃப் வாய்ப்பை மும்பை அணி இழந்ததற்கு ஹர்திக்கின் கேப்டன்சிதான் காரணம் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கௌதம் கம்பீர், “வில்லியர்ஸ் கேப்டனாக இருக்கும்போது சாதித்தது என்ன? அவரது கேப்டன்சி வரலாற்றை எடுத்து பாருங்கள், மற்றவர்களின் கேப்டன்சியைவிட மிகவும் மோசமானதாக இருக்கும்” எனக் காட்டமாக கூறினார்.
Similar News
News November 9, 2025
பிக்பாஸில் இரட்டை எவிக்ஷன்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்

BB தமிழ் சீசன் 9-ல் முதல் முறையாக ஒரே வாரத்தில் 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் ரம்யாவும், துஷாரும் எவிக்ட் ஆனதாக தகவல் பரவியது. தற்போது, துஷாரும், பிரவீன் ராஜ்தேவும் எலிமினேட் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. பிரவீன் ராஜ்தேவ் அன்அபிசியல் வாக்குப்பதிவில் லீடிங்கில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் எப்படி எவிக்ட் ஆனார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
News November 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 9, ஐப்பசி 23 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News November 9, 2025
களத்தில் படுகாயமடைந்த RCB கேப்டன்

இந்திய வீரரும், ஆர்சிபி கேப்டனுமான ராஜத் பட்டிதார் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் களம் காண மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான முதல் பயிற்சி டெஸ்டில் அவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் ராஜத் பட்டிதார் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் அவர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.


