News May 15, 2024
நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (3)

இந்த மோசடி தொடர்பாக 2020இல் ராணா கபூர், தீரஜ் வதாவனை ED கைது செய்தது. தொடர்ந்து, 2022இல் சிபிஐ தீரஜை கைது செய்ய, அவர் சிறையிலேயே சொகுசாக வாழ்வதாகவும், உடல்நிலையை காரணம் காட்டி நாள் கணக்கில் மருத்துவமனையிலேயே தங்கி இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவரை, உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் கைது செய்ய சிபிஐ அனுமதி பெற்றது.
Similar News
News January 14, 2026
நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

நெல்லை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News January 14, 2026
இதெல்லாம் ஆரோக்கியமற்ற உணவுகள் தெரியுமா? PHOTOS

‘உணவின்றி உயிரில்லை’ என்பது உண்மை தான். ஆனால், இன்றைய காலத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவே பல சமயங்களில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடுகிறது. பல உணவுகளில் இருக்கும் ஆபத்தை அறியாமலேயே, அவற்றை நாம் உட்கொள்கிறோம். இந்த உணவுகளை தற்போது உடல் ஏற்றுக்கொண்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று மேல் உள்ள போட்டோக்களில் காணலாம். SHARE IT
News January 14, 2026
புதுவையில் புதிய கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

புதுச்சேரியில் சமீபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK), என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், LJK-வுக்கு 2 இடங்கள் ஒதுக்க NR காங்., ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதுவையில் தவெக உடன் NR காங்., கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில், அரசியல் களத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


