News May 15, 2024
ஆறு, குளம், ஏரிகளுக்குச் செல்ல வேண்டாம்

தேனி, தென்காசி. விருதுநகர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரித்துள்ள மாவட்ட நிர்வாகம் கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதால் நடந்து செல்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
ராகுலின் புகாருக்கு EC விளக்கம் அளிக்க வேண்டும்: சசிதரூர்

சமீப காலமாக காங்கிரஸுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் EC மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் புகாருக்கு தேர்தல் ஆணையம்(EC) பதில் அளிக்க வேண்டும் என சசிதரூர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு விளக்கம் கொடுப்பது EC-ன் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News August 8, 2025
சுதந்திர தின விடுமுறை: ரயில் முன்பதிவு தொடங்கியது

சுதந்திர தின விடுமுறையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆக.14 சென்னை – போத்தனூர்(06027), ஆக.17 நாகர்கோவில் – தாம்பரம்(06012), ஆக.14 சென்னை எழும்பூர் – செங்கோட்டை(06089) ஆகிய சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி <
News August 8, 2025
தீவிரவாதி குடும்பத்துடன் பேச அனுமதி

2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி தஹாவூர் ராணா, அவனுடைய குடும்பத்துடன் ஒருமுறை போனில் பேச டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய வழக்கறிஞரை மாற்றிவிட்டு, புதிய வழக்கறிஞர் நியமிப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் பேச வேண்டும் என அவன் அனுமதி கோரி இருந்தான். தற்போது டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா, ராணாவிற்கு சேவை வழங்கி வருகிறார்.