News March 18, 2026
ஆண்மையற்றவர் எனப் பொய் புகார் கூறுவது மனக் குரூரம்: HC

ஆண்மையற்றவர் என்று கணவன் மீது பொய் குற்றம்சாட்டுவது மனக்குரூரம் என ஜார்கண்ட் HC கண்டனம் தெரிவித்துள்ளது. ஆண்மையின்மை குற்றச்சாட்டு கணவரின் நற்பெயரை பாதிக்கும் என்பதுடன், தீவிர மனவேதனையை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். விவாகரத்து வழங்கிய குடும்ப நல கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இக்கருத்தை தெரிவித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News April 11, 2026
திமுகவில் இருந்து அடுத்த விலகல்.. ஸ்டாலின் அதிர்ச்சி!

மனோஜ் பாண்டியன் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ்மாயவன் விலகியுள்ளார். ஆலங்குளம் பிரசார களத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், திமுக நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன் மதிப்பதில்லை என்பதால் சுயமரியாதையின்றி இங்குப் பயணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே <<19563851>>வேலூர்<<>>, கோவையிலும் திமுக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகினர்.
News April 11, 2026
₹56,100 சம்பளம், 243 பணியிடங்கள்.. Apply Now

தேசிய தகவலியல் மையத்தில் 243 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கணினி அறிவியல் & தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் & செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பணிகளுக்கு B.E/ B.Tech கல்வித்தகுதியுடன், GATE மதிப்பெண் அவசியமாகும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த <
News April 11, 2026
குடிக்க சொல்லும் ஸ்டாலின்: அண்ணாமலை

கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவின் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, சிந்தாந்த அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும் திமுகவை அகற்ற பாஜகவும், அதிமுகவும் ஒன்றாக இணைந்துள்ளதாக தெரிவித்தார். தனக்கு சொந்தமாக கார் கூட இல்லையென்று கூறி CM ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய அவர், காமராஜர் படி என்றார்; ஸ்டாலின் குடி என்கிறார் என்று விமர்சித்தார்.


