News March 18, 2026
காங்., திமுகவினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி திமுக – காங்., கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பம் எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அப்படி இருக்கையில், பங்குனி அமாவாசை என்பதால் காங்கிரஸ், திமுகவினர் போட்டிபோட்டு அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக, திமுக சார்பில் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காத நிலையில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
Similar News
News April 7, 2026
தேனி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

தேனி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <
News April 7, 2026
உழைத்தவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்தாரா தமிழிசை?

உழைத்தவர்களுக்கு வாய்ப்பை விட்டுக்கொடுக்காமல் தேர்தலில் போட்டியிடுவதாக பாஜகவினர் சிலர் விமர்சித்தது குறித்து தமிழிசை பதிலளித்துள்ளார். அவர்களின் ஆதங்கம் புரிகிறது என்ற அவர், ஆனால் தன்னுடைய டாக்டர் பணியை துறந்து, பாஜகவுக்காக 27 ஆண்டுகள் உழைத்ததாக கூறியுள்ளார். இதனால்தான் தலைமை தனக்கு உரிய பதவிகளை வழங்கியது எனவும், தான் யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News April 7, 2026
துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


