News May 15, 2024
இதனால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது: அமித்ஷா

தோல்வி உறுதியானதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்களிக்க விரும்பாமல், தேர்தலைப் புறக்கணித்ததால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது. காந்திநகரின் களநிலவரங்களை பாஜகவினரிடம் கேட்டறிந்தபோது, பல சந்தேகங்கள் நீங்கின. NDA கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்” என்றார்.
Similar News
News March 21, 2026
BREAKING: தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

தங்கம் விலை நேற்று உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் ₹330 குறைந்து ₹13,620-க்கும், 1 சவரன் ₹2,640 குறைந்து ₹1,08,960-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 21, 2026
பாஜகவுக்கு மறைமுகமாக உதவுகிறதா திமுக?

தமிழகத்தில் பாஜகவை கொள்கை ரீதியாக கடுமையாக எதிர்க்கும் கட்சிகளான விசிக & இடதுசாரிகளுக்கு இது சோதனையான காலம் என்கின்றனர் விமர்சகர்கள். தொகுதிகள் ஒதுக்குவதில் தேமுதிகவுக்கு தாராளம் காட்டும் திமுக, இந்த கட்சிகளிடம் கறார் காட்டுகிறது. கொள்கை ரீதியாக இணைந்தவர்களுக்கு தொகுதிகளை குறைப்பது, அவர்களின் பலத்தையும், வளர்ச்சியையும் குறைக்கிறது. இது பாஜகவுக்கு மறைமுகமாக உதவும் என்கின்றனர். உங்கள் கருத்து?
News March 21, 2026
ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணுங்க பாஸ்..❤️

இயந்திரத்தனமாக மாறிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக பேச கூட நேரம் இருப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 4 முறையாவது கட்டிப்பிடித்தல் அவசியம் என பல ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆதரவாக தொட்டு பேசுவதும், கட்டிப்பிடிப்பதும் லவ் ஹார்மோனான ‘ஆக்ஸிடாஸின்’-ஐ அதிகம் சுரக்க செய்கிறதாம். இது மன அழுத்தம், பயம், கவலையை போக்கி, மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.


