News May 15, 2024

17 வாகனங்களின் உரிமம் ரத்து

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில பட்டுக்கோட்டையில் நேற்று (மே.14) நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது முறையாக பராமரிக்காத 17 வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப் பட்டது. பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி திடலில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த 32 தனியார் பள்ளிகளில் உள்ள 218 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Similar News

News December 9, 2025

Gpay மூலம் மோசடி செய்த இளைஞர் கைது

image

கபிஸ்தலத்தில் பெட்டிக்கடை நடத்தும் முகமது பைசல் என்ற முதியவரிடம் Gpay மூலம் பணம் அனுப்பினால் திருப்பி தந்துவிடுவதாக கூறி ரூ.7,300 மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய கபிஸ்தலம் காவல்துறையினர், இனாம் கிளியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26), என்ற இளைஞரை கைது செய்தனர்.

News December 9, 2025

தஞ்சாவூர்: இருசக்கர வாகன விபத்து – 2 சிறுவர்கள் பலி

image

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக்(17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(17) ஆகிய இரண்டு சிறுவர்களும்
இருசக்கர வாகனத்தில், திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து ஊருக்கு திரும்பி வருந்துள்ளனர். அப்போது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதாகோவில் சாலை ஓரமாக இருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பலியாகினர்.

News December 9, 2025

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

error: Content is protected !!