News March 18, 2026

900 பேர் பலி.. அடுத்த சோகம்

image

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக மார்ச் 2-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த கொடூர தாக்குதல்களில் சிக்கி லெபனானில் 67 பெண்கள் மற்றும் 111 குழந்தைகள் உட்பட 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், 2,221 படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

Similar News

News April 4, 2026

பெயின்ட் விலையில் எதிரொலித்த போரின் தாக்கம்

image

ஈரான் போரின் தாக்கம் பெயின்ட் விலையிலும் எதிரொலித்துள்ளது. பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகரித்ததால், முன்னணி நிறுவனங்கள் பெயின்ட் விலையை 10% வரை உயர்த்தியுள்ளன. இதனால், 20 லிட்டர் பெயின்டை கூடுதலாக ₹400 வரை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் இருப்பதாக வீடு கட்டுவோர் வேதனை தெரிவிக்கின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News April 4, 2026

நானும் மதுரைக்காரன் தான்: சுந்தர்.சி

image

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி, மனைவி குஷ்புவுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தான் வெளியூர்காரன் என்பதே எதிர்க்கட்சியினர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு என்றார். நான் வெளியூர்காரன் அல்ல. என் பூர்விகம் பழனி, இனி மதுரை தான் என் ஊர் என்ற அவர், மதுரையில் வீடு பார்த்துவிட்டதாக கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News April 4, 2026

IPL TOSS: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

image

MI-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல குறைவால் இன்றைய போட்டியில் பாண்ட்யா பங்கேற்காததால், சூர்யகுமார் MI கேப்டனாக செயல்படுகிறார். மேலும், தீபக் சஹார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் களம் காண்கின்றனர். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளும் 13 முறை மோதியுள்ள நிலையில், அதிகபட்சமாக DC 7 முறை வென்றுள்ளது.

error: Content is protected !!