News May 15, 2024

கோடை மழை வெளுத்து வாங்குகிறது

image

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், கடலூர், சேலம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Similar News

News September 11, 2025

செங்கோட்டையன் வரிசையில் இணைந்தார்.. அதிரடி நீக்கம்

image

ஒரே வாரத்தில் 3 முக்கிய தலைவர்களின் அடுத்தடுத்த நீக்கம் TN அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. கடந்த 6-ம் தேதி செங்கோட்டையனை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். 8-ம் தேதி மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ அதிரடியாக அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அன்புமணியை, ராமதாஸ் நீக்கியுள்ளார்.

News September 11, 2025

முருகதாஸை விட SK-க்கு அதிக சம்பளம்?

image

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘மதராஸி’ படம் தியேட்டர்களில் அளவான ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, AR முருகதாஸ் – ₹30 கோடி, சிவகார்த்திகேயன் – ₹40 கோடி, வித்யூத் ஜம்வால் – ₹4 கோடி, ருக்மினி வசந்த் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் தலா ₹3 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?

News September 11, 2025

நேபாளத்தின் இடைக்கால பிரதமராகும் குல்மன் கிசிங்!

image

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் குல்மன் கிசிங் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. Social Mediaவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டில் Gen-Z போராட்டம் வெடித்தது. இதனால் பிரதமராக இருந்த சர்மா ஒலி, குடியரசு தலைவர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், இடைக்கால பிரதமராக குல்மன் கிசிங் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!