News May 15, 2024
இந்திய மசாலா பொருள்களுக்கு நியூசிலாந்தில் தடையா?

எவரெஸ்ட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் மசாலா பொருள்களின் தரம் குறித்து ஆய்வுசெய்து வருவதாக நியூசிலாந்தின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அந்த மசாலா பொருள்களில், புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாகக் கூறி, ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்தன. தற்போதைய நிலையில், அப்பொருள்களின் தரம் குறித்து அமெரிக்க அரசு ஆய்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 11, 2025
முருகதாஸை விட SK-க்கு அதிக சம்பளம்?

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘மதராஸி’ படம் தியேட்டர்களில் அளவான ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, AR முருகதாஸ் – ₹30 கோடி, சிவகார்த்திகேயன் – ₹40 கோடி, வித்யூத் ஜம்வால் – ₹4 கோடி, ருக்மினி வசந்த் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் தலா ₹3 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News September 11, 2025
நேபாளத்தின் இடைக்கால பிரதமராகும் குல்மன் கிசிங்!

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் குல்மன் கிசிங் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. Social Mediaவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டில் Gen-Z போராட்டம் வெடித்தது. இதனால் பிரதமராக இருந்த சர்மா ஒலி, குடியரசு தலைவர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், இடைக்கால பிரதமராக குல்மன் கிசிங் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
News September 11, 2025
அரசியல் கட்சிகளில் குடும்ப தகராறு: ஒரு பார்வை PHOTOS

கட்சியின் வளர்ச்சியை தடுப்பதாக கூறி, அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியுள்ளார் ராமதாஸ். இப்படி, ஒரே குடும்ப உறவுகளுக்குள் வெடிக்கும் அரசியல் மோதல் தமிழகத்துக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி புதிதல்ல. இதற்கு முன்பே எந்தெந்த கட்சிகளில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது? என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். பார்த்த பிறகு, உங்களின் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க.