News March 18, 2026
செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த CBI

கரூர் வழக்கு தொடர்பாக நேற்று CBI விசாரணைக்கு ஆஜரானபோது அவர்கள் கேட்ட கேள்விகள் செந்தில் பாலாஜியை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். விஜய் பங்கேற்ற கூட்டத்தை சீர்குலைக்க, ஆயுதங்களுடன் ஆள்களை அனுப்பினீர்களா? என அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு, இது என் மீது விஜய் தரப்பினர் சுமத்திய அபாண்டமான குற்றச்சாட்டு எனவும், அவர்கள் கூறியதில் துளியளவும் உண்மை இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
Similar News
News April 6, 2026
FLASH: அமீர் வீட்டில் IT அதிகாரிகள் சோதனை

சென்னையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய <<19578024>>ஜாபர் சாதிக்கை<<>> தொடர்ந்து இயக்குநர் அமீர் வீட்டிலும் IT அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, ₹2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது, அது தொடர்பாக இயக்குநர் அமீரிடம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
மக்களுடன் இருப்பதே மகிழ்ச்சி: டி.ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் வீடு வீடாக சென்று டி.ஜெயக்குமார் வாக்கு கேட்டு வருகிறார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கடந்த 5 ஆண்டுகால திமுக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இதன்பின் பேசிய அவர், ராயபுரம் தொகுதி மக்களின் வரவேற்பிலும், பாசத்திலும் நெகிழ்ந்து போகிறேன் என்றும், எப்போதும் தனது தொகுதி மக்களுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உருக்கமாக தெரிவித்தார்.
News April 6, 2026
ஒரே நாளில் கேஸ் சிலிண்டர் டெலிவரி.. SCAM ALERT

‘இன்றே கேஸ் டெலிவரி’ என்ற பெயர்களில் போலி வெப்சைட்டுகள் மூலம் மோசடிகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. ✦https://indanegasservice.site/ ✦https://samedaydgascylinder.co.in/ ✦https://inoilpump2026.us.cc/register ✦https://gasagencydealership.in/ ✦https://www.indianoilcorporations.in போன்ற இணையதளங்களை பயன்படுத்த வேண்டாம். தவறுதலாக இதில் பணத்தை இழந்திருந்தால், ‘1930’ எண்ணில் புகார் அளிக்கவும். SHARE IT.


