News May 15, 2024
பள்ளி மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 31, 2025
வேலூர்: கார் மோதி ஏசி மெக்கானிக்காக பலி

வேலுார் அரியூர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் நரேஷ் (எ) விக்கி (24) ஏசி மெக்கானிக்காக வேலை செய்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விபத்துகுள்ளானது. இதில் நரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேலுார் தெற்கு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 31, 2025
வேலூர்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு APLLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 31, 2025
வேலூர்: ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

வேலுார் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 30) காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பிரவீன் அறையில் இருந்த மின்விசிறியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேலுார் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, இறப்பின் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


