News May 15, 2024
தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசுமை விருது சாம்பியன் வழங்குவது குறித்த கருத்துக்களை ஆட்சியர் வழங்கினார்.
Similar News
News March 8, 2026
ராணிப்பேட்டை : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
ராணிப்பேட்டை : தனிமையில் போக பயமா? கவலை வேண்டாம்!

ராணிப்பேட்டை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
ராணிப்பேட்டை: கட்சித் தாவிய 100 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஓச்சேரி தனியார் மண்டபத்தில் நேற்று மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ம.க. மாநில மாணவரணி துணை செயலாளர் ஒச்சேரி பழனி, அதிமுகவைச் சேர்ந்த அருண், திபன், குப்பன் உள்ளிட்ட பலர் அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


