News May 15, 2024
சென்னை புனித மேரி தேவாலயம் சிறப்பு!

செயிண்ட் சார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது புனித மேரி தேவாலயம். இது இந்தியாவின் பழைமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இந்த தேவாலயம் பிரபலமாக ‘கிழக்கின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே’ என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக கட்டபட்ட இந்த தேவாலயம், 1680 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ரெவ். ரிச்சர்ட் போர்ட்மேன் என்பவரால் தேவாலயம் ஆரம்பிக்கப்பட்டது. கட்டிடத்தின் உள் பரிமாணங்கள் 86 அடி மற்றும் 56 அடி ஆகும்.
Similar News
News January 15, 2026
சென்னை: நாளை இதற்குத் தடை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.16) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை & கள்ளிக்குப்பம் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் இந்த உத்தரவிற்கு இறைச்சிக் கடை வியாபாரிகளும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
News January 15, 2026
சென்னை: இனி WhatsApp-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை Whatsapp-ல் இலவசமாக பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)
News January 15, 2026
சென்னை: பொங்கல் நேரத்தில் கரண்ட் கட்டா? உடனே CALL!

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க சென்னை மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


