News May 15, 2024
அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்

தமிழ்நாட்டில் மே 19ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (மே 16) 10 மாவட்டங்களிலும், மே 17, 18 தேதிகளில் 26 மாவட்டங்களிலும், மே 19ஆம் தேதி 28 மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்கள் அடுத்த 5 நாள்களுக்கு கனமழையை பெற இருக்கின்றன. இதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
வரலட்சுமி நோன்பில் பெண்கள் இவற்றை செய்யக்கூடாது!

தீர்க்க சுமங்கலியாக வாழ கடைபிடிக்கப்படும் வரலட்சுமி நோன்பில் பெண்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் உண்டு: தலைமுடியை கட்டாமல் Loose Hair-ல் பூஜை செய்யக்கூடாது ★மனதில் சஞ்சலத்துடன் பூஜை செய்ய கூடாது ★இரவல் அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் ★கசப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பாயாசம் வீட்டில் கண்டிப்பாக செய்ய வேண்டும் ★அம்மனின் உடைகள் வெள்ளை கறுப்பு நிறத்தில் இருக்கக்கூடாது.
News August 8, 2025
வரும் 28ம் தேதி முதல் துலீப் டிராபி.. இவர்கள் தான் கேப்டன்

2025 துலீப் டிராபி தொடர் பெங்களூருவில் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. வடக்கு மண்டலத்திற்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மண்டலம்- துருவ் ஜுரெல், கிழக்கு மண்டலம்- இஷான் கிஷண், தெற்கு மண்டலம்- திலக் வர்மா, மேற்கு மண்டலம்- ஷர்துல் தாகூர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாராவது தேசிய அணிக்காக விளையாட சென்றால், அவர்களுடைய கேப்டன் பொறுப்பு மற்றவர்களால் நிரப்பப்படும்.
News August 8, 2025
இடுப்பு வலியை நீக்கும் சலபாசனம்

✦கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ✦மலச்சிக்கல் தீரும். ✦15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ✦முதுகெலும்பு வலுப்பெறும். ✦இடுப்பு வலி நீங்கும். ✦வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும். ✦ஜீரண உறுப்புகள் நன்கு வேலைசெய்யும். ✦இதயக்கோளாறு, உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.