News May 15, 2024
3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் & கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

தேவர் குருபூஜையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு நாளை(அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நவ.1-ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. SHARE IT.
News October 29, 2025
விசிகவுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்: திருமா

வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக கேட்கும் சீட்களை திமுக வழங்குமா என திருமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விசிகவுக்கு அதிக சீட்களை கொடுத்தால், கூட்டணிக்குள் பிரச்னை வருமோ என திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் அச்சப்படுவதாக கூறியுள்ளார். ஆனால், இதற்காக விசிக அமைதியாக இருக்காது எனவும், தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சீட்களை கேட்டுப்பெறும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News October 29, 2025
Spam Call-களுக்கு செக் வைக்க TRAI முடிவு

Spam Call-களை கட்டுப்படுத்த TRAI முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி உங்களுக்கு போன் செய்பவர்களின் உண்மையான பெயர்கள், மொபைல் டிஸ்பிளேயில் தெரியவரும். இதற்கான முன்மொழிவிற்கு TRAI ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவர் சிம் கார்டு வாங்கும் போது கொடுத்த ஆவணங்களில் இருந்து இந்த ‘Calling Name Presentation’ செயல்படுத்தப்பட உள்ளது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், Truecaller போன்ற 3-ம் நிலை செயலிகள் தேவைப்படாது.


