News March 17, 2026

தவெகவுடன் கூட்டணியா? நயினார் மழுப்பல்

image

அதிமுக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், EPS-ம் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் NDA உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இப்போதும் தவெக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுபற்றி விஜய் கூறினால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News April 4, 2026

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் விஜய் விலகினார்

image

EX அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான Dr.விஜய், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக WAY2NEWS-க்கு பேசிய அவர், வேலூர் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் சிலரின் சதியால் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார். அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து உழைத்த உழைப்புக்கு பலனில்லை என்பதால் வெளியேறுவதாகவும் கூறினார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 4, 2026

EPS டெல்லிக்கு காவடி தூக்குகிறார்: ஸ்டாலின்

image

சுயநலத்திற்காக அதிமுகவை பாஜகவின் கொத்தடிமையாக EPS கொண்டு வந்துவிட்டதாக அக்கட்சியினரே புலம்புகின்றனர் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாகர்கோவில் பரப்புரையில் பேசிய அவர், இஸ்லாமிய மக்களைப் போலவே கிறிஸ்தவ மக்களுக்கும் துரோகம் செய்ய EPS தயாராகிவிட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தனது பொதுச் செயலாளர் பதவியை காப்பாற்ற டெல்லிக்கு EPS காவடி தூக்குகிறார் எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

News April 4, 2026

மகளிர் வங்கியில் ₹25,000.. சற்றுமுன் அறிவிப்பு வந்தது!

image

புதுச்சேரிக்கு தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் சற்றுமுன் அறிவித்தார். அதில், *துணைநிலை கவர்னரின் தலையீடு இல்லாமல் மாநில அந்தஸ்து கொண்டு வர 100% முயற்சி. *ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல். *மகளிருக்கு மகப்பேறு உதவித்தொகையாக ₹25,000, *இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். *மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ₹20 மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

error: Content is protected !!