News May 15, 2024
கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி

சென்னை: அமைந்தகரை அய்யாவு காலணியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வீட்டின் முகப்பு இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த நவ்ஷாத் என்பவர் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 8, 2026
சென்னை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
சென்னையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

கோயம்பேடு காய்கறிகள் வணிக வளாகத்தில், இன்று (மார்ச். 08) தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இம்மாத முதல் வாரத்தில்,1 கிலோ தக்காளி ரூ. 20 மற்றும் 30 என விற்று வந்த நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.6 முதல் ரூ.10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தக்காளி விலை வீழ்ச்சிக்கு, தக்காளி வரத்து அதிகமானதே காரணம் என கோயம்பேடு வியாபாரிகள் கூறினர்.
News March 8, 2026
சென்னை: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

சென்னை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.


