News May 15, 2024
பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் – பயணிகள் அவதி

கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தனியார் குடியிருப்பு எல்டிஆர் பில்டிங்கிலிருந்து செப்டிக் டேங்க் சேதமடைந்து மனித கழிவுகள் பேருந்து நிலையத்தில் புகுந்துள்ளதால் பேருந்து நிலையம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் நோயை இலவசமாக வாங்கி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Similar News
News July 8, 2025
எந்த வயத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் 2/2

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 2வது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்குல் 04146-222288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 1/1

கள்ளக்குறிச்சியில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டு குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத் தொகை சேமித்து வைக்கப்படும். <<16987300>>தொடர்ச்சி<<>>
News July 8, 2025
தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.