News May 15, 2024

‘G.O.A.T’ படம் ‘Zee’க்கு கைமாறியதன் பின்னணி

image

‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ₹55 கோடிக்கு வாங்க சன் டிவி பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கக் கூடாது எனவும், 2 மணி நேர பேட்டிக்கு விஜய் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கூறியதால், படத்தை ஜீ நிறுவனத்திற்கு படக்குழு கைமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News March 14, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 14, 2026

ஒரு தலை காதல்.. உயிருடன் எரித்து கொலை

image

புதுச்சேரியில் நேற்றிரவு இளம்பெண் மீது ஜோசப் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90% உடல் எரிந்த நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் இன்று காலை உயிரிழந்தார். இதற்குமுன் இருவரும் பழகி பிரிந்த நிலையில், ஜோசப் தன்னை தொந்தரவு செய்வதாக அந்த பெண் ஏற்கெனவே போலீஸில் புகார் அளித்திருந்தார். இருந்தும் ஜோசப் அவரை விடாமல் துரத்தி கொலை செய்துள்ளார்.

News March 14, 2026

இனி INSTA-வில் பாதுகாப்பு இருக்காதா?

image

Instagram செயலியில் மே 8-ம் தேதி முதல் END-TO-END-ENCRYPTION நீக்கப்படும் என்று META அறிவித்துள்ளது. அனுப்புநர் – பெறுநர் இடையேயான குறுஞ்செய்தியை பிறர் பார்க்காமல் இருப்பதற்கான அம்சம் தான் END-TO-END-ENCRYPTION. இந்த பிரைவசி வசதியை CHATS-ல் இருந்து நீக்க உள்ளதால், INSTA பயனர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. மேலும் பாதுகாப்பான உரையாடலுக்கு WhatsApp-ஐ Meta பரிந்துரைந்துள்ளது.

error: Content is protected !!