News May 15, 2024

அரசு மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர்க்கை தொடக்கம்

image

ஆண்டிபட்டி அரசு மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல தொழில்நுட்ப பிரிவுகளில்
8ம் வகுப்பு முதல் மேற்படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.750, சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. புதுமைப்பெண் திட்டம் உண்டு. மேலும் விவரங்களுக்கு 93440 149240, 88385 22077ல் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News March 14, 2026

தேனி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1.20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

News March 14, 2026

தேனி: அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

image

தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களை அந்த அணியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் தேனி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கெளதம், உப்பார்பட்டி மேற்கு கிளைச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 14, 2026

தேனி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

தேனி அருகே தெற்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் மார்.12 அன்று ஈஸ்வரன் பைக்கில் சென்ற போது நாகராஜன் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். காயமடைந்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி GH-ல் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜனை கைது செய்தனர்.

error: Content is protected !!