News May 15, 2024
12 மணி நேர போராட்டத்திற்கு பின் 14 பேரும் மீட்பு

ராஜஸ்தானில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கத்தில் நேற்றிரவு லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் சிக்கினர். தொடர்ந்து மீட்புப் பணியில் போலீசாரும், பேரிடர் மீட்பு படையினரும் 12 மணி நேரத்திற்கும் மேல் போராடியதில், 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
Similar News
News March 20, 2026
சட்டமன்றத் தேர்தல் காவல்துறை பார்வையாளர் நியமனம்!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிக்க காவல்துறை பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவ்வகைய்ல், கடலூர் மாவட்ட காவல்துறை பார்வையாளராக ஹேமந்த் குட்டியால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 8300697288 என்ற எண்ணில் அவரிடன் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
புதுச்சேரியில் தவெக கூட்டணி முடிவு மாறியது!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது. அங்கு, ஆளும் NR காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தவெக 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதனால், இன்று (அ) நாளை 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளாராம்.
News March 20, 2026
என்ன செய்கின்றனர் SC/ST எம்எல்ஏக்கள்?

தமிழக சட்டப்பேரவையில் <<19430913>>ரிசர்வ் தொகுதிகள்<<>> மூலம் 46 பேர் MLA-க்களாக உள்ளனர். ஆனால், தங்களின் சமூக மக்களின் பிரச்னைகளுக்கு அவர்கள் பேசுவதில்லை என்ற விமர்சனம் உள்ளது. வன்கொடுமை சம்பவமாக இருந்தாலும், பட்டியல் மக்களுக்கான நிதியை தவறாக பயன்படுத்தினாலும் இவர்கள் போராடுவதில்லை, பதவிக்காக தாங்கள் சார்ந்த கட்சிகளின் ஊதுகுழல்களாகவே செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. உங்கள் கருத்து?


