News May 15, 2024
தென்காசி: மாற்றுப்பாதை பயன்படுத்த அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை இலிருந்து இலஞ்சி செல்லும் சாலையில் மேம்பாலம் வேலை நடைபெற்று வருவதால் இருசக்கர வாகனம் செல்வதற்கு பாதை இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் நேற்று முதல் அந்த பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்று வழிப் பாதையை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Similar News
News March 11, 2026
தென்காசி: டூவீலர் விபத்தில் பெணுக்கு மூளைச்சாவு.!

தென்காசி மாவட்டம், இடைகாலைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 49). இவர் அங்கன்வாடி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். டூவீலர் விபத்தில் படுகாயமடைந்த இவர், பாளை GH ல் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முனியம்மாள் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கருவிழிகள் ஆகியவற்றை தானமாக வழங்கினர்.
News March 10, 2026
தென்காசி: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
தென்காசி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

தென்காசி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.


