News May 15, 2024
நாமக்கல் அருகே ரூ.95 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.16,002 முதல் ரூ.19,705 வரையிலும், உருண்டை ரகம் குவிண்டால் ரூ.14,827 முதல் ரூ.17,042 வரையிலும், பனங்காலி ரகம் குவிண்டால் ரூ.21,384 முதல் ரூ.26,899 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1,150 மூட்டை மஞ்சள் ரூ.95 லட்சத்துக்கு ஏலம் போனது.
Similar News
News August 21, 2025
நான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்!

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம் நாளை (22.08.2025 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட வாய்ப்புகள் செய்துத்தரப்படும்.
News August 21, 2025
நாமக்கல் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
News August 21, 2025
நாமக்கல் மக்களே 750 பேங்க் ஆபிசர் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே..பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<