News May 15, 2024

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

image

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். 6 Four, 5 Six என விளாசிய அவர் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இதனால், டி20 போட்டிகளில் அதிகமுறை 50+ ரன்களுக்கு மேல் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 1. பாபர் அசாம்-39, 2.விராட் கோலி-38, 3.ரோஹித் ஷர்மா-34, 4.முகமது ரிஸ்வான்-29 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Similar News

News March 23, 2026

பயந்துவிட்டாரா டிரம்ப்?

image

ஈரானை மிரட்டிக் கொண்டிருந்த டிரம்ப் திடீரென 5 நாள் போர்நிறுத்தம் அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து எல்லா நாடுகளையும் நெருக்குகிறது. மேலும், இந்த போருக்கு ₹2 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டும் அமெரிக்காவால் வெற்றியை நெருங்க முடியவில்லை. இதற்கு மேல் இழப்புகளை தாங்க முடியாது என்றே டிரம்ப் இம்முடிவை எடுத்திருப்பார் என நிபுணர்கள் கூறுகின்றனர்

News March 23, 2026

பள்ளி மாணவர்களுக்கு அரசின் மகிழ்ச்சியான செய்தி

image

மாணவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும், விபரீத எண்ணங்களை குறைக்கவும் பள்ளிகளுக்கு அரசின் புதிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, 14416, 14417, 104, 1098, 181 போன்ற உதவி எண்களை பயன்படுத்தி மனநல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோரின் பங்களிப்போடு இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டால் மாணவர்களின் மனநல பாதுகாப்பு மேம்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT

News March 23, 2026

ஒருநாள் கூட ஆகல.. விஜய் செய்தது சரியா?

image

புதுச்சேரியில் திடீரென <<19454919>>நேமக<<>>-வுடன் கூட்டணி அமைத்த விஜய், அவர்களுக்கு 2 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளார். முன்னதாக, நேற்று இரவுதான் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உருளையன்பேட்டையில் மரிய பிரான்சிஸ், தட்டாஞ்சாவடியில் பன்னீர்செல்வம் என்பவரும் தவெக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டனர். அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே போட்டியிடும் வாய்ப்பு பறிபோயுள்ளது பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து?

error: Content is protected !!