News May 15, 2024
‘ராயன்’ இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 50ஆவது படம் என்பதால், இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், தனுஷ் பணியாற்றிய அனைத்து இயக்குநர்களையும் அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
Similar News
News March 10, 2026
OPS தனது முடிவை மாற்றினார்.. மீண்டும் ஜெயலலிதா போட்டோ!

OPS, திமுகவில் இணைந்தவுடன் வீட்டிலிருந்து அகற்றிய ஜெயலலிதாவின் போட்டோவை மீண்டும் வைத்துள்ளார். OPS, திமுகவில் இணைந்ததால் அப்செட்டில் உள்ள இளைய மகன் ஜெயபிரதீப், OPS-யிடம் பேசாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், உடனடியாக ஜெயலலிதாவின் போட்டோவை அகற்றியது இணையத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதனால், OPS தனது முடிவை மாற்றி ஸ்டாலின் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களை வைத்துள்ளார்.
News March 10, 2026
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பீரன் சிங் எங்டி (81) உடல்நலக்குறைவால் காலமானார். 1970 முதல் அசாமின் திப்பு லோக்சபா தொகுதியில் இருந்து 5 முறை MP-ஆக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News March 10, 2026
மீண்டும் திமுக கூட்டணியில் பஞ்சாயத்து

திமுக கூட்டணியில் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பிரச்னை வெடித்துள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு தற்போது 4 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாம். இதனையடுத்து, அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, கடைசி நேரத்தில் கூட்டணி கூட மாறலாம் என கூறப்படுகிறது.


