News May 15, 2024
வரத்து குறைவால் பலாப்பழங்கள் விலை உயர்வு

கொல்லிமலை சோளக்காடு பழங்குடியினர் சந்தையில், வரத்து குறைவால் பலாப்பழங்கள் விலை உயர்வடைந்துள்ளது. தற்போது மலைப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பலாப்பழம் சோளக்காடு பழங்குடியினர் சந்தை மற்றும் தெம்பலம் ஆகிய 2 சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிறிய ரக பலாப்பழம் ரூ.170-க்கும், சற்று பெரிய ரக பலாப்பழம் ரூ.250 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News November 24, 2025
நாமக்கல்லில் கார் மோதி பயங்கரம்!

நாமக்கல் மாவட்டம், கதிராநல்லூர் நத்தம்மேடு எம்ஜிஆர் காலனி சேர்ந்தபெரியசாமி (57) வள்ளிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்லும் போது சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த கார் அவரது ஸ்கூட்டரில் மோதி படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 24, 2025
மோகனூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் சடலம்!

மோகனூர் அருகே வடுகப்பட்டி சேர்ந்த சுப்பிரமணி (75) ஒருவந்தூரில் உள்ள தமிழழகன் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந்தேதி சென்ற அவர் காணாமல் போனார். நேற்று மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. அது சுப்பிரமணி என்பதை மகன் கோபி அடையாளம் கண்டார். மோகனூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
நாமக்கல்: ரூ.23.51 லட்சத்துக்கு காய்கறி பழங்கள் விற்பனை

நாமக்கல் கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், விடுமுறை தினத்தை யொட்டி நேற்று காய்கறி மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 44 டன் காய்கறிகள் மற்றும் 11 டன் பழங்கள் என மொத்தம் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.23 லட்சத்து 51 ஆயிரத்து 570-க்கு விற்பனை செய்யப்பட்டன.


