News May 15, 2024

திருச்சி: திடீரென ஏற்பட்ட தீ விபத்து 

image

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளை கொண்டு சமையல் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

Similar News

News March 22, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 22, 2026

திருச்சி: கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – எஸ்பி

image

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

திருச்சி: ஆட்சியர், ஆணையரை மாற்ற கோரிக்கை

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் நீண்ட நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென, பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

error: Content is protected !!